Saturday, July 25, 2009

COLLEGE TO CORPORATE

அழகிய கனவது
உரங்கியே கடந்தது நான்காண்டு
அழகிய நிலவது
தேய்ந்தே கரைந்தது நான்காண்டு
பின்பு விழித்து எழுந்தேன்
இனி தான் வாழ்க்கை என்று
இன்று வியர்த்து உழைக்கிறேன்
இது தான் வாழ்க்கை என்று

Tuesday, July 14, 2009

PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student

part-2
விடுதிக்கு புதுசு

" ஒடம்ப பார்த்துக்கோ ,நல்ல சாப்பிடு ,அடிக்கடி போன் பண்ணு " இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே விக்ரமன் படமா ஓடிகொண்டுருக்க ,முதல் மாடியில் இருக்கும் தான் அறையை நோக்கி நடந்தான் வினோத் .

காதில் வாக்மன் ,கையில் ஏதோ இங்கிலீஷ் நாவல் படித்தபடியே அமர்ந்து இருந்தான் ஹரிச்சந்திரன், வினோத்தின் அறை பங்காளி.

"ஹாய் அம் ஹரி , மெக்கானிகல் "என்று அறிமுக பேச்சு ஆரம்பம் ஆனது.. "வினோத் மதுர ECE" .யார் கேட்டாலும் ஊர் பெயரையும் சேர்த்து சொல்லும் பழக்கம் வினோத்திற்கு உண்டு .மதுரைக்காரன் என்று சொல்வதில் ஒரு தனி பெருமையாக கருதினான் .அறிமுக பேசேல்லாம் முடிந்த பின் ராகிங் ,ஹோம்சிக்நெஸ்,பிகர் இப்படி வெட்டியாக பேசியே இரவானது .

பேச்சு வாக்கில் "ஏன் டா நீ மெக்கு எடுத்த "என்று விவரம் தெரியாமல் கேட்டான் வினோத் " நம்ம காலேஜ்ல மெக்கு தான் டா weightu ,அசோக் லேய்லாண்டு , பேரக்ஸ் இந்தியா ஓட எல்லாம் tieup இருக்கு டா . கோர் கம்பெனி எல்லாம் காம்பஸ்ல வருவாங்க டா .. இப்படி மெக்கானிகல் துறையின் அருமை பெருமைகளை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டே " நீ ஏன்டா ECE எடுத்த" என்று வினோத்தை பார்த்து கேட்டான் ஹரி.

"அதுவா மச்சான், ECE எடுத்த சாப்ட்வேர் ,கோர் ரெண்டுமே போகலாம் டா , higher studies கூட நல்ல scope இருக்கு சொன்னாங்க அது தான்" .சரியா வாய குடுத்து மாட்னோம் ,councellingல அந்த பக்கம் உக்காந்தவன் இந்த பக்கம் உக்காந்தவன் ECE எடுத்த ஒரே காரணத்திற்காக நான் ECE எடுத்தேன்னு இவன் கிட்ட சொல்ல முடியாம ,கொலைகார பாவி மெக்கு சேர்றதுக்கு முன்னாடி பயங்கரமா விசாரிச்சிருக்கான்,நல்ல வேளை ஷண்முகநாதன் ஓட பேச்சு குடுத்தனால இவன் கிட்ட கண்டதையும் பேசி சமாளிச்சோம் டா சாமி " என்று மனதிற்குள் பெருமூச்சுவிட்டுகொண்டு ஹரியுடன் விடுதி உணவகத்துக்கு நடந்தான் வினோத்.

உணவருந்தி முடிந்தபின் ,

"ஏன் மச்சான் இவளோ சிக்கிரமா தூங்க போற" தன் அலாரத்தை சரி பார்த்து கொண்டிருந்த ஹரியை பார்த்து கேட்டான் வினோத். "டேய் இங்க காமன் பாத்ரூம் டா" காலையில சிக்கரம் எழுந்திரிச்ச தான் பாத்ரூம் கிடைக்கும்.
"ஒ அப்படிய சரி அப்ப என்னையும் எழுப்பி விட்டிரு மச்சான் குட் நைட் "என்று சொல்லி முடித்த பின் ,முதல் நாள் விடுதி இனிமையாக இருந்ததை எண்ணி நிம்மதியாக உறங்கினான் வினோத் .

மறுநாள் காலை , சுமார் எழு மணிக்கு மெல்ல தூக்கம் களைந்து எழுந்திரிந்த வினோத்திற்கு அதிர்ச்சி . குளித்து முடித்து ,புது துணி ,புத்தம் புது காலனி என்று புது மாப்பிள்ளை போல ஜோராக இருந்தான் ஹரி."உன்னை எத்தன வாட்டி டா எழுப்பி விட , சரி சிக்கிரம் ரெடி ஆகு " என்று கண்ணாடியில் தலைவாரி கொண்டே கூறினான் ஹரி. படுக்கையை விட்டு வெளிய வந்த வினோத்திற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. விடுதி வளாகமே விழாகோலம் புன்டிருக்க ,அங்கும் இங்கும் என ஆர்வமாக உலாவி கொண்டிருந்தனர் மாணவர்கள்.

" டேய் நேத்து நைட் யவனும் துங்கலிய டா ஏன்டா இப்படி ?" அதிர்ச்சியின் உச்சத்தில் வினோத் கேட்க "நான் பரவில பக்கத்து ரூம் ஷண்முகநாதன் காலேஜுக்கு கிளம்பி கால் மணி நேரம் ஆச்சு " என்று சொல்லி அறையை விட்டு கிளம்பினான் ஹரி .

கிட்ட தட்ட எல்லோருமே குளித்து முடித்துருக்க ,காலியாக இருந்த குளியலறையில் ஜாலியாக குளித்து முடித்து,முதல் நாள் கல்லூரிக்கு தயார் ஆனான் வினோத் .

(தொடரும்)












பஞ்ச் பரட்டை


லாபம்
அருள்மிகு Commercial King பேரரசு துணை
அருள்மிகு கிங் காங் சீனியர் விஜய.T.ராஜேந்தர் துணை


இந்த பகுதியில அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்ஸ் எழுதலாம்னு இருக்கேன் .இத நான் ஏற்கனவே ஏதோ பேரரசு படத்துல கேட்ட மாறி இருக்கு நீங்க பீல் பண்ண நான் ஒன்னும் பண்ண முடியாது ...


களத்துல எறங்குடா பஞ்ச் பரட்டை ...

"காத்தயே கையில பிடிக்க முடியாது

நான் சூறாவளி டா "



சிம்பு ஸ்டைல் பஞ்ச்:
"ஒரு பொண்ணு பின்னால எத்தன நாள் சுற்றோம்கிறது முக்கியம் இல்ல
கடைசியா நீ அந்த பொண்ணு கூட ஒரு நாழவது சுத்துனியங்கிறது தான் முக்கியம் "


உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ...

Monday, July 13, 2009

PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student

part-1
TVS நகர் to திருமலைசமுத்திரம்
சாஸ்திர பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு ECE (Electronics and Communication) பொறியியல் துறையில் சேர்ந்துருக்கும் மாணவன் தான் வினோத் குமார்.


பொதுவா இந்த ECE துறையில் சேரும் மாணவர்களை முன்று விதமாக பிரிக்கலாம். ECE சேர்ந்தா ஹர்ட்வேரும் போகலாம் சாப்ட்வேரும் போகலாம்னு சொல்லிட்டு சேர்ரவங்க முதல் ரகம்.

எனக்கு எலக்ட்ரானிக்ஸ்ல ரொம்ப ஆர்வம், B.Tech முடிச்சிட்டு அமெரிக்கால போய் MS பண்ண போறேனு சுத்த போறவங்க இரண்டாவது ரகம்.இவங்க ஆர்வ கோளாறுக்கு ஆளவே இருக்காது.இதுல கூத்து என்னன்னா நம்ம பையன் +2 படிக்கும் போது physics la எலக்ட்ரானிக்ஸ் பாடத்த அப்படியே சாய்ஸ்ல விட்டு படிசுருப்பன் ஆனா இங்க வந்து அலெக்சாண்டர் கிரகாம்பெல்லுக்கு அக்கா பையன் மாதிரி சீன் போடுவான்.

கௌன்செளிங் ஹால் போற வரைக்கும் எது எடுக்க போறோம் தெரியாம, சரி எல்லோரும் இத தான் விரும்பி எடுக்குறாங்க, நம்மளும் இதையே எடுப்போம்னு முதல் இரண்டு ரகத்தோரையும் நம்பி நாசமா போனவங்க தான் முன்றாம் ரகம்.இந்த ரகத்தை சேர்ந்தவன் தான் வினோத் .


திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த சாஸ்திர பல்கலைகழகம்.AIEEE (all india entrance engg exam) கௌன்செளிங் முறையிலும் இங்க மாணவர்கள் சேர்வதால்,அனைத்து மாநிலத்து மாணவர்களையும் இங்கு நீங்கள் பார்க்கலாம் .

அன்று மே மதம் 19ம் நாள் 2005ம் ஆண்டு ,

கல்லூரி,விடுதி,நண்பர்கள் இப்படி எல்லாமே புதிதாக இருக்க,பெற்றோரை வழியனுப்பி விட்டு,கவலைக்கும் பயதிருக்கும் நடுவிலிருக்கும் உணர்வுடன் மெல்ல நுழைந்தான் விடுதிருக்குள்...

(தொடரும்)




Wednesday, July 8, 2009

PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student

முன்னுரை

பொதுவா எல்லோருக்கும் ரெண்டு விஷயம் மனதிற்கு ஆனந்தம் தரும் ...ஒன்னு பழைய நினைவுகள் ...இன்னொன்னு புதுசு புதுசா காணும் கனவுகள்...எனக்கும் அப்படி தான்...கனவுகளை கவிதைகளை ஆக்க முயற்சிப்பேன்...பழைய நினைவுகளை ஒரு கதையை மாற்றும் ஒரு முயற்சி தான் இந்தா Prelab Demo Viva..

(ஓவரா பேசாம சட்டு புட்டுனு மாட்டருக்கு வாட ..)
ஓகே ஓகே ...

இந்தா கதையின் நாயகனின் பெயர் வினோத் குமார் ...சாஸ்திர பல்கலைக்கழகத்தின் படித்த மாணவன் ...19 ஜூன் 2005 முதல் 19 மே 2008 வரை அவன் மற்றும் அவனை சுற்றி நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்ட கதை தான் இது ...

ஆட்டோகிராப் முதல் ஹாப்பி டேய் வரை இதே கதை தானே இதுல என்னை புதுசா இருக்குன்னு நீங்க கேக்கலாம் ..

ஆமாம் இதுவும் அதே கதை தான் ..

ஆனால் இது என் கல்லூரி ,என் நன்பர்களை பற்றியது அதுனால் இதுவும் அழகா தான் இருக்கும்..

சரி கதைக்கு போவோம் :)

Saturday, July 4, 2009

கமிட் ஆயாச்சு...

நண்பர்களே,

இது வரைக்கும் இந்த bloga யாருமே சீண்டல...இதுக்கு மேலையும் பொறுக்க முடியாது...ஏதாவது பண்ணியே ஆகணும் so இனிமே கவிதை மட்டுமில்லை கையில்லா வர்ற எல்லாம் எழுத போறேன்....

கதை, சினிமா விமர்சனம்,இசை விமர்சனம் இப்படி நிறைய எழுதலாம் இருக்கேன்...தயவு செஞ்சு இந்த மாதிரி தப்பான முடிவிக்கு வந்துறாதன்னு நீங்க சொன்னாலும் கேக்க போறதில்ல ...


ஏன்ன நான் ஒரு தடவ கமிட் ஆயிட்ட என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ...(no bad words please )

இதுக்கு மேலயும் நீங்க படிக்கலைனா ...கீழயாவது படிங்க ...ஆனா படிங்க...