Saturday, December 13, 2008

Evolution

நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் ...

நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் ...

நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் ...

நிழற்படம்

உன் நிழலை துரத்திய நாட்களை நினைக்க செய்கின்றது உன் நிழற்படம்..

உவமையே இல்லாத கவிதை போல ஊமையாக இருக்கிறது உன் நிழற்படம் ...

கல்லில் உயிர் உள்ள கடவுளை பார்க்க கற்றேன் அன்று..இந்த காகிதத்துடன் ( நிழற்படம் )வாழ கற்கிறேன் இன்று...:(

Monday, October 27, 2008

Sunday, October 26, 2008

தீபாவளி .அன்றும் .இன்றும் :(

அன்று ,என் வயது 12.
அடுத்த வாரம் வரும் தீபாவளிக்காக ,
தேடி பிடித்து வாங்கினேன் வித விதமான பட்டாசுக்களை .

வாரம் முழுவதும் கனவுகள் ,

கனவுகள் முழுவதும் பட்டாசுகள் .


தீபாவளியும் வந்தது ....."மழையோடு" ,

வானை பார்த்தே நான் சொன்னேன்
" நீ அழும் வரை , நானும் அழுவேன் என்று"


அன்றைய தினம்,

தீபாவளி பலகாரம் அன்று எனக்கு இனிக்கவில்லை .
புது துணி மீதும் எனக்கு விருப்பம் இல்லை .

அது ஏனோ தெரியவில்லை ,
பக்கத்து ஊரில் என் நண்பன் ,
வைத்த வெடியை கூட ரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை .

இந்த ஈரமான மண்ணும் ,ஈரமான கண்ணும் காய்வது எப்போது?
என் மனதின் காயங்கள் மறையும் அப்போது.

இன்று, என் வயது 22.
அன்றைய தீபாவளி போல ,
இன்றைய வாழ்கைக்காக தேடி பிடித்தேன் ஒரு வேலையை.

அன்றைய பட்டாசு கனவுகளை போல,
வேலைக்கு செல்கிறேன் கனவில் மட்டும் .

மழை நிற்க விண்ணை பார்த்தேன் அன்று,
கால் லெட்டர்காக கணிணியை பார்க்கிறேன் இன்று .


அன்றைய பக்கத்து ஊர் நண்பனை போல,

இன்றைய வேலைக்கு செல்லும் நண்பர்கள்.

இது கதையா கவிதையோ என்று எனக்கு தெரியது ?


ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,


இந்த கதையின் விதையும் ,இந்த கவிதையின் கதையும்

தீரும் நாளே எனக்கு தீபாவளி.




Thursday, September 18, 2008

நீயா ?? நானா??

யானைக்கும் அடிசறுக்கவது போல ,

ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல

எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???

"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,

இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)

Monday, September 8, 2008

கல்லூரி நாட்கள் -"my happy days"

வீட்டையே மறக்க செய்தது நான் தங்கிய விடுதி ...
அவ்வப்போது நினைக்க செய்தது விடுதியில் நான் அருந்திய உணவு ....
8:40 மணிக்கு தொடங்கும் முதல் வகுப்பு வகுப்பறையில் .....
8:30 க்கு பக்கேட்கலின் அணிவகுப்பு இடம் பிடிக்க குளியலறையில் ....
என் வகுப்பறை ஒரு பூஞ்சோலை....
அங்கு கன்னுமிடமெல்லாம் நட்பென்ற பூ பூத்து குலுங்கும்..... பூன்சோலையினால் என்னவோ தெரியவில்லை ..
நானும் என் நண்பர்களும் வகுப்பறையிலே உறங்கி போய்விடதுண்டு....
தேர்வறையிலும் தேவதைகளை தேடியதால்,குறைந்தது என் மதிப்"பெண்கள்":)

திரும்பி கிடைக்குமா ???
இரவில் நாங்களே சமைத்து சாப்பிட்ட மேக்கி நூடுல்ஸ் ....
திரும்பி கிடைக்குமா???
மழையிலும் நனைந்து கொண்டே குடித்த பவா கடை தேநிர்...
திரும்பி கிடைக்குமா??
விடுதியே கலவரமாக்கும் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ...

என் கேள்வி பட்டியல் மிகவும் பெரிது ....
அதற்கான பதிலோ ஒரு வார்த்தை தான் ...

சிறந்த ஒரு கவிதையின் வரி போல ஆழமானது ...
நாம் கல்லூரியில் சந்தித்த சுகமான வலிகள் .....

இறைவனிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி

திரும்ப கிடைக்குமா ???
என் கல்லூரி நாட்கள் ....







Thursday, September 4, 2008

rain n pain

மழை வந்தது எதனால் ??

புயல் கடல் கடந்ததாலா....

பெண்ணே நீ என்னை கடந்ததாலா...


மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...

மழையில் வெளியில் நடக்காதே ......


மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே

Thursday, August 28, 2008

பூ..

முள் உள்ள பூக்களில் சிறிந்தது ரோஜா ..

முள் இல்லாதா பூக்களில் சிறந்தது நீ ..

Saturday, August 16, 2008

திறமை ...

நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...

கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...

கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....

உன் திறமையை தேடி பிடி...

வெற்றிக்கு அதுவே முதல் படி...

Sunday, August 10, 2008

இந்தியனின் ஒலிம்பிக்ஸ் ஏக்கம் :(


பதக்க பட்டியலில் முதல் இடத்தை நோக்கி சீனா...
பதக்க பட்டியலில் ஒரு இடத்தை நோக்கி நாம் ...

ஆங்கிலத்தில் சொன்னால் ...

we SEARCH for a medal..
while chinese MARCH towards it...

இனியாவது ...

நம் ஏக்கம் தீர .....
நம் பிஞ்சுகளுக்கு ......

உணவோடு பதக்க கனவுயும் ஊட்டுங்கள் ...

Thursday, August 7, 2008

சஹாரா ..

என் கவிதையும் கள்ளி செடியும் ஒன்று தான் ....
ஊர் எல்லாம் அதில் உள்ள முட்களை தான் பார்த்தார்கள் ....
அவள் மட்டும் தான் அதில் கூட உள்ள சிறு பூவையும் பார்த்தாள் :)

Tuesday, August 5, 2008

உயிர் நீர் ...

அன்பே நி சூரியன் என்றால் என் கவிதைகள் வெண்நிலவு அடி ..

தேயிந்தாலும் சரி ...

வளர்ந்தாலும் சரி....

ஒளிர்வது உன்னால் தான் ....

என்னை மட்டும் எரிக்கும் சூரியனே......

கடல் நீரை கரைத்து உப்பு எடுப்பது போல் ...

என் கண்ணீரை கரைத்து உயிர் எடுத்து விடு ......

Monday, August 4, 2008

PAIN:THE SHAPE OF LOVE

விளை நிலத்தில் விதையை போட்டு முடி
மழைக்காக கார்த்திருக்கும் விவசாயி போல் ..

என்னவள் பார்வைக்காக கார்த்திருன்தேன் நான் ...

ஹ்ம்ம் ......


வளையல்கள் எல்லாமே வட்டமடி ...
காதலின் இனிமையே இந்தா கஷ்டமடி ...

Sunday, August 3, 2008

காதல் மழை

வதைக்கும் வெயிலால் தொண்டையில் தாகம் ....
அவளை பார்க்காததால் நெஞ்சில் சின்ன சோகம் ...

தவமாய் கிடந்தேன் ...
வரமாய் வந்தாள்.....

அப்போது கையில் விழுந்தது சில மழை துளிகள்...
ஹம்ம்ம்....

மின்னல் வந்தால் மழை வந்து தானே ஆக வேண்டும் :)..
பின்பு தீர்த்தமாய் குடித்தேன் அந்த மழை துளிகளை ...

தாகம் தணியவில்லை....
அவளை பார்க்காத சோகம் தணிந்தது ......

Saturday, August 2, 2008

என் கண்ணீர் ஏன் சுடுகின்றது ??

எரியாத மெழுகுவர்த்தியை என் நெஞ்சம் இருந்தது....
ஏற்றி வைத்தது உன் நினைவுகள் ..
உருகும் மெழுகு போல்வழியும் கண்ணீர்...


கண்ணீர் சுடும் காரணம் இது தானோ ???

தாகம்

நீர் இன்றி வாடும் நிலம்
போல்நீ இன்றி என் நெஞ்சம் வாடுது