Monday, December 20, 2010

சொல்ல போவதில்லை என் காதலை

சொல்லி தான் புரியவைக்க வேண்டுமா என்ன

இந்த காதல் என்ற உன்னத உணர்வை

சொல்லாத காதல் கூட ஒரு விதமான சுகமான வலியே

Thursday, November 25, 2010

உன்னோடு உன் நினைவுகளும் தொலைந்திருந்தால்
கனவென்ற பெயரில் என் தூக்கம் எரிந்திருக்காது
கவிதை என்ற  பெயரில் இவைகளும் முளைத்திருக்காது

Wednesday, September 1, 2010

Dejavu

முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையின் ஏக்கத்தை போன்றாரு தாக்கத்தை தந்தது
பாதியிலே முடிந்து ஒழிந்த அவளை பற்றிய கனவு !!!!

Monday, July 19, 2010

என்னவளே..

கண்டதுடன் வந்த காதல்கள் எல்லாம்
காலபோக்கில் மறைந்து போக,இன்று
கனவினில் மட்டுமே காணும் உன்னை
மறக்க மறுப்பது ஏனோ ?

நித்திரையில் பூக்கும் பூவாக
கனவில் உன் பிம்பங்கள்
உறக்கத்தை எரிக்கும் தீயாக
நெஞ்சத்தில் உன் எண்ணங்கள்

இனி இது தான் காதல் என்று சொல்லவதை விட
இவள் தான் என் காதல் என்றே சொல்லுவேன் .

Wednesday, May 26, 2010

இந்த பாதை எங்கு போகும்?

கண்ணை மூடிக்கொண்டு பாதை இருட்டாக உள்ளது என்று கூறுமளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
இருட்டாய் இருக்கும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு ,உண்மையை உணர மறுக்கும் ஒரு பெரிய முட்டாள் .
காதலை சொல்லாமல் ,தாடியும் வளர்க்காமல் இயல்பாக இயங்க எனக்கும் ஆசை தான்
வழக்கம் போல் வாழ வாழ்க்கை இல்லையே, நீ இல்லாததால்
எழுதிய கவிதைகள் குப்பையாய் தோன்றிட
எழுதும் கவிதைகளை என்னவென்று கூற
காதலில் வலிகள் உண்டு என்று சொன்னிர்களே
வலிகள் மட்டும் தான் காதல் என்று ஏன் சொல்லவில்லை ?

Saturday, July 25, 2009

COLLEGE TO CORPORATE

அழகிய கனவது
உரங்கியே கடந்தது நான்காண்டு
அழகிய நிலவது
தேய்ந்தே கரைந்தது நான்காண்டு
பின்பு விழித்து எழுந்தேன்
இனி தான் வாழ்க்கை என்று
இன்று வியர்த்து உழைக்கிறேன்
இது தான் வாழ்க்கை என்று

Tuesday, July 14, 2009

PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student

part-2
விடுதிக்கு புதுசு

" ஒடம்ப பார்த்துக்கோ ,நல்ல சாப்பிடு ,அடிக்கடி போன் பண்ணு " இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே விக்ரமன் படமா ஓடிகொண்டுருக்க ,முதல் மாடியில் இருக்கும் தான் அறையை நோக்கி நடந்தான் வினோத் .

காதில் வாக்மன் ,கையில் ஏதோ இங்கிலீஷ் நாவல் படித்தபடியே அமர்ந்து இருந்தான் ஹரிச்சந்திரன், வினோத்தின் அறை பங்காளி.

"ஹாய் அம் ஹரி , மெக்கானிகல் "என்று அறிமுக பேச்சு ஆரம்பம் ஆனது.. "வினோத் மதுர ECE" .யார் கேட்டாலும் ஊர் பெயரையும் சேர்த்து சொல்லும் பழக்கம் வினோத்திற்கு உண்டு .மதுரைக்காரன் என்று சொல்வதில் ஒரு தனி பெருமையாக கருதினான் .அறிமுக பேசேல்லாம் முடிந்த பின் ராகிங் ,ஹோம்சிக்நெஸ்,பிகர் இப்படி வெட்டியாக பேசியே இரவானது .

பேச்சு வாக்கில் "ஏன் டா நீ மெக்கு எடுத்த "என்று விவரம் தெரியாமல் கேட்டான் வினோத் " நம்ம காலேஜ்ல மெக்கு தான் டா weightu ,அசோக் லேய்லாண்டு , பேரக்ஸ் இந்தியா ஓட எல்லாம் tieup இருக்கு டா . கோர் கம்பெனி எல்லாம் காம்பஸ்ல வருவாங்க டா .. இப்படி மெக்கானிகல் துறையின் அருமை பெருமைகளை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டே " நீ ஏன்டா ECE எடுத்த" என்று வினோத்தை பார்த்து கேட்டான் ஹரி.

"அதுவா மச்சான், ECE எடுத்த சாப்ட்வேர் ,கோர் ரெண்டுமே போகலாம் டா , higher studies கூட நல்ல scope இருக்கு சொன்னாங்க அது தான்" .சரியா வாய குடுத்து மாட்னோம் ,councellingல அந்த பக்கம் உக்காந்தவன் இந்த பக்கம் உக்காந்தவன் ECE எடுத்த ஒரே காரணத்திற்காக நான் ECE எடுத்தேன்னு இவன் கிட்ட சொல்ல முடியாம ,கொலைகார பாவி மெக்கு சேர்றதுக்கு முன்னாடி பயங்கரமா விசாரிச்சிருக்கான்,நல்ல வேளை ஷண்முகநாதன் ஓட பேச்சு குடுத்தனால இவன் கிட்ட கண்டதையும் பேசி சமாளிச்சோம் டா சாமி " என்று மனதிற்குள் பெருமூச்சுவிட்டுகொண்டு ஹரியுடன் விடுதி உணவகத்துக்கு நடந்தான் வினோத்.

உணவருந்தி முடிந்தபின் ,

"ஏன் மச்சான் இவளோ சிக்கிரமா தூங்க போற" தன் அலாரத்தை சரி பார்த்து கொண்டிருந்த ஹரியை பார்த்து கேட்டான் வினோத். "டேய் இங்க காமன் பாத்ரூம் டா" காலையில சிக்கரம் எழுந்திரிச்ச தான் பாத்ரூம் கிடைக்கும்.
"ஒ அப்படிய சரி அப்ப என்னையும் எழுப்பி விட்டிரு மச்சான் குட் நைட் "என்று சொல்லி முடித்த பின் ,முதல் நாள் விடுதி இனிமையாக இருந்ததை எண்ணி நிம்மதியாக உறங்கினான் வினோத் .

மறுநாள் காலை , சுமார் எழு மணிக்கு மெல்ல தூக்கம் களைந்து எழுந்திரிந்த வினோத்திற்கு அதிர்ச்சி . குளித்து முடித்து ,புது துணி ,புத்தம் புது காலனி என்று புது மாப்பிள்ளை போல ஜோராக இருந்தான் ஹரி."உன்னை எத்தன வாட்டி டா எழுப்பி விட , சரி சிக்கிரம் ரெடி ஆகு " என்று கண்ணாடியில் தலைவாரி கொண்டே கூறினான் ஹரி. படுக்கையை விட்டு வெளிய வந்த வினோத்திற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. விடுதி வளாகமே விழாகோலம் புன்டிருக்க ,அங்கும் இங்கும் என ஆர்வமாக உலாவி கொண்டிருந்தனர் மாணவர்கள்.

" டேய் நேத்து நைட் யவனும் துங்கலிய டா ஏன்டா இப்படி ?" அதிர்ச்சியின் உச்சத்தில் வினோத் கேட்க "நான் பரவில பக்கத்து ரூம் ஷண்முகநாதன் காலேஜுக்கு கிளம்பி கால் மணி நேரம் ஆச்சு " என்று சொல்லி அறையை விட்டு கிளம்பினான் ஹரி .

கிட்ட தட்ட எல்லோருமே குளித்து முடித்துருக்க ,காலியாக இருந்த குளியலறையில் ஜாலியாக குளித்து முடித்து,முதல் நாள் கல்லூரிக்கு தயார் ஆனான் வினோத் .

(தொடரும்)